Monday, October 20, 2008

நெஞ்சுக்குள் பெய்திடம் மாமலை (வாரணம் ஆயிரம்)




நெஞ்சுக்குள் பெயிதிடம் மாமலை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாருது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி
என் உயிரை உயிரை நீயேந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

நெஞ்சுக்குள் பெயிதிடம் மாமலை (1)


ஏதோ ஒன்று என்னை யீர்கக
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கல்ல தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகம் இல்லா
நீ நின்ற இடமெல்லாம் விலை ஏறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யர்றோ தெரியாத
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதெ
இவள் பின்னால் நெஞ்சே போகாதே

நெஞ்சுக்குள் பெயிதிடம் மாமலை (1)

தூக்கங்களை தூக்கி சென்றாய்
ஏக்கங்களை தூவி சென்றாய்
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீசு எது
நில் என்று நீ சொன்னாள் என் காலம் நாகராதே
நீ சூடும் பூவெல்ளம் ஒரு போதும் உதிராதே
காதல் என்னை கேட்கவில்லை
கேட்டாள் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இது தானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

நெஞ்சுக்குள் பெயிதிடம் மாமலை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாருது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி
என் உயிரை உயிரை நீயேந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

No comments: